Monday 11 April 2011

நரை முடி

தலையில் முடி கருகரு என்று கருப்பு நிறத்தில் வளரக் காரணம் நம்தோலில் இருக்கும் மெலனின் என்ற சுரப்பிதான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதனால் கருமையான முடி வளர்ந்து வருகிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பிக்கும்போது முடி வெள்ளையாக வளர ஆரம்பிக்கிறது. மெலனின் சுரப்பி குறைவாக ஏன் சுரக்கிறது என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். அதிக வயதானவர்களுக்கு ஹைட்ரஜன் பேராக்சைடு முடியில் அதிகமாக உற்பத்தியாவதை கண்டு பிடித்தார்கள். இந்த ஹைட்ரஜன் பேராக்சைடுதான் மெலனின் உற்பத்தியை குறைக்கிறது என்றும் கண்டு பிடித்தார்கள். சிலருக்கு வாலிப வயதிலேயே நரைப்பதற்ககும் ,சிலருக்கு வம்சா வழியாகவே நரைப்பதற்கும் இந்த அடிப்படைச் சமாச்சாரமே காரணமாகும். சரியான உணவுகளை சாப்பிடாமல் போவதாலும் முடி நரைக்கலாம். கவலை மனசோர்வு காரணத்தாலும் இப்படி முடி நரைக்கலாம்.
நரை முடி
1. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 10 கருவேப்பிலையை
மென்றுதின்று ஒருடம்ளர் தண்ணீர் குடித்து வரலாம் நரை முடி

2. சீயக்காய், கடுக்காய், பயத்தம்பருப்பு, நெல்லிக்காய் ஆகியவற்றை
அரைத்து மாவாக்கி கொண்டு அதை தேய்த்து குளிக்கலாம் நரை முடி.

3. இரும்பு சத்து உணவுபொருட்களை சேர்த்துகொள்ளலாம் நரை முடி.

4. மருதாணி, கருவேப்பிலை, செம்பருத்தி இவைகளை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வரலாம் நரை முடி.

5. மருதாணிஇலை வெந்தயம் கொஞ்சம்,ஒரு எலுமிச்சை சாறு இவைகளை அரைத்து தினமும் குறித்து வந்தால் நரைமுடி போய்விடும்.

6. கீரை, காய்கறி, பால், முட்டை, மீன் முதலியவைகளை உண்ணலாம்.

7. வைட்டமின் b12 உள்ள உணவுப்பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

8. காபி டீ பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

9. தினமும் கருவேப்பிலை துவையல் சாப்பிடலாம்.

10. கருவெப்பிலை சாறு எடுத்து, அதே அளவு தேங்காய் எண்ணெயையும் எடுத்து இரண்டையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்

நரைமுடி இல்லாமல் செய்யநரைமுடி மறைய, நரைமுடி கருப்பாகநரைமுடி கருப்பாக வேண்டுமா, வெள்ளை முடி,இலவச மருத்துவ குறிப்புகள்